மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று இரவு 1.50 லட்சம் கன அடியை எட்டும். அதேபோல் நாளை மாலைக்குள் 2.40 லட்சம் கன அடியை எட்டும் என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் அறிக்கை. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால், மேட்டூர் அணை அருகே கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லுமாறு மத்திய ஜல்சக்தி அமைச்சகம், தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisment

tamilnadu mettur dam water level suddenly raised karnataka water increase

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. அணையின் நீர் இருப்பு கடந்த நான்கு மணி நேரத்தில் 2 அடி உயர்ந்துள்ளது. தற்போது அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1.05 லட்சம் கனஅடியாக உள்ளது.