Advertisment

தமிழகத்துக்கான காவிரி நீர்வரத்து குறைந்தது!

tamilnadu mettur dam cauvery water level

Advertisment

காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு காவிரி நீர்வரத்து வினாடிக்கு 15,000 கனஅடியில் இருந்து 10,000 கனஅடியாகக் குறைந்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்து குறைந்துள்ளது.

இன்று (09/11/2020) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,670 கனஅடியில் இருந்து 13,274 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.46 அடியாகவும், நீர் இருப்பு 59.11 டி.எம்.சியாகவும் இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12,000 கனஅடி; கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய்க்கு வினாடிக்கு 800 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

Mettur Dam Salem water level
இதையும் படியுங்கள்
Subscribe