சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது "தமிழகத்தில் கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் இரு தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/chennai meteorological.jpg)
சென்னையில் வான மேக மூட்டத்துடன் காணப்படும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6% அதிகம் பெய்துள்ளது. அதே சமயம் சென்னையில் 68 செ.மீ.க்கு பதில் 58 செ.மீ வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. மேலும் புதுவையில் 77 செ.மீ.க்கு பதில் 54 செ.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 30 % குறைவு டிசம்பர் இறுதி வரை வடகிழக்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளது". இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.
Follow Us