Advertisment

'இருப்பிட சான்றிதழைச் சரிபார்க்க சிறப்பு குழு' -மருத்துவக் கல்வி இயக்குனர் தகவல்

TAMILNADU MEDICAL COUNSELLING STUDENTS NATIVE CERTIFICATE

Advertisment

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் நாள் கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று (19/11/2020)7.5% உள் இடஒதுக்கீட்டில் எஞ்சிய மாணவர்களுக்கு கலந்தாய்வு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இன்றைய மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க 362 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் இருப்பிட சான்றிதழைச் சரிபார்க்க 5 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கபட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.

ஒரே மாணவர் இரு வேறு மாநிலங்களில் மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

certificate medical counselling students Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe