/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cm233_0.jpg)
7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் கல்விச் செலவை அரசே ஏற்கும். ஸ்காலர்ஷிப் அனுமதி வரும் வரை காத்திராமல் உடனடியாகச் செலுத்த சூழல் நிதியை உருவாக்க உத்தரவிட்டுள்ளேன். கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் என அனைத்தையும் அரசே செலுத்தும். கல்வி, விடுதி செலவுகளை ஏற்று மாணவர்கள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்தியுள்ளதை அனைவரும் அறிவர். தி.மு.க. உதவுவதாகத் தெரிவித்திருப்பது ஒரு அரசியல் நாடகமே என்பதை மக்கள் நன்கு அறிவர். அரசின் உதவி மாணவர்களுக்கு முழுமையாக கிடைக்கும் என தெரிந்த பின்பும் தி.மு.க. அறிவித்தது அரசியல் நாடகம்' என குறிப்பிட்டுள்ளார்.
7.5% இடஒதுக்கீட்டின் கீழ்தனியார் கல்லூரியில் சேரும் அரசுபள்ளி மாணவர்களின் கட்டணத்தை ஏற்பதாக தி.மு.க. அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)