TAMILNADU LOCKDOWN TRAFFIC POLICE PEOPLES

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 17- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisment

Advertisment

இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியதாக இதுவரை 4,37,061 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,62,036 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூபாய் 4.60 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4,12,215 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.