தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் (TSROA) சென்னை மாவட்ட மையத்தின் சார்பில், பொது ஊரடங்கினால் வேலை வாய்ப்பின்றி வாடும் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் (02/05/2020) சென்னை கே.கே.நகரில் வசிக்கும் 100 நலிந்த நாடக கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 1,00,000 மதிப்புள்ள மளிகை பொருட்களை வழங்கினர். இந்த நிகழ்வில் மாநில வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில சட்ட ஆலோசகர் கோ.குமரன், மாநில பொருளாளர் டி.முரளி, மாநில செயலாளர் த. மஞ்சுநாத், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.அருண், ஆர்.பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வின் போது சமூக இடைவெளிபின்பற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.