உள்ளாட்சி தேர்தலில் மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

மறைமுக தேர்தல் முறையை ரத்து செய்யக்கோரி உரிமை மீட்பு கழகத்தைச் சேர்ந்த யேசுமணிஎன்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில்,‘தமிழ்நாட்டிலுள்ள 15 மாநகராட்சிகளுக்கான மேயர்கள், 276 நகராட்சிகள், 561 பேரூராட்சிகள் ஆகியவைகளுக்கான தலைவர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இப்போது இப்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

tamilnadu local body election indirect high court

மறைமுக தேர்தல் என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. கடந்த செப்டம்பர் 27- ஆம் தேதி தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பாக உத்தரவு பிறப்பித்தது. அதேவேளையில் கடந்த 19- ஆம் தேதி அதிரடியாக மறைமுக தேர்தல் நடப்பதற்கான அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது அரசியல் சட்ட விரோதமாகும். அரசின் இந்தப் புதிய நடைமுறை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே, அந்தச் சட்டத்தை அரசு ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். அதுவரை, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.