உள்ளாட்சித் தேர்தல்- மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக கட்சியின் நிர்வாகிகளுடன் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்து வருகிறார்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டுகட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (09.12.2019) முதல் தொடங்குகிறது.

tamilnadu local body election dmk party meeting chennai mk stalin

சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும்,இக்கூட்டத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், திமுக எம்எல்ஏக்கள், திமுக எம்.பிக்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அவர்களுடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகவும், கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்தும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Chennai DMK PARTY DMK PRESIDENT MK STALIN leaders meeting Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe