தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவிக்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது. டிசம்பர் 13- க்குள் தேர்தல் அட்டவணையை அறிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டியிருந்தது. மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுகிறது. தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஒன்றியங்கள் உள்ளன.