தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 என இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை (06.12.2019) தொடங்குகிறது. இருப்பினும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.

Advertisment

tamilnadu local body election bjp party committee form

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்காக பாஜக கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் 14 பேர் கொண்ட பணிக்குழுக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் இல.கணேசன், ஹெச்.ராஜா, சி.பி. ராதாகிருஷ்ணன், நரேந்திரன், மோஹன்ராஜூலு, கருப்பு முருகானந்தம், வானதி சீனிவாசன், நாகராஜன், நயினார் நாகேந்திரன், சிவகாசி பரமசிவம், வேதரத்தினம்,மகாலட்சுமி, வெங்கடேசன், எஸ்.எஸ்.ராமதாஸ் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த பாஜக உள்ளாட்சித் தேர்தலிலும், இதே கூட்டணியில் தொடர வாய்ப்புள்ளதாக தகவல் கூறுகின்றன.