அதிமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை (06.12.2019) நடைபெறும் என்று அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

Advertisment

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை (06.12.2019) மாலை 05.00 மணிக்குஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, கட்சியின் நிர்வாகிகளுடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்கின்றனர். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

tamilnadu local body election admk party meeting at chennai

கடந்த 2- ஆம் தேதி தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 என இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.