சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை சந்தித்தார் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவிற்கு முக்குலத்தோர் புலிப்படை ஆதரவளிப்பதாக கூறிய நிலையில் சந்திப்பு நடைபெற்றது.
(கோப்புப் படம்)
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, அதிமுக கட்சி தலைமை மக்களவை தேர்தலில் இடம் பெற்றிருந்த தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.