தமிழகத்தில் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை மேற்கு போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக அசோக்குமார் நியமனம். அதேபோல் வணிக குற்றப் புலனாய்வு பிரிவு காவல் கண்காணிப்பாளராக லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல்துறை தலைமையகத்தின் துணை ஆணையராக விமலா நியமிக்கப்பட்டுள்ளார்.