tamilnadu industrial minister thangam thenarasu goes to delhi

Advertisment

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி மையத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டுவருவது தொடர்பாக மத்திய அரசிடம் பேச தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (27/05/2021) காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். அமைச்சருடன் திமுகவின் பொருளாளரும், கட்சியின் மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர். பாலுவும் டெல்லி சென்றுள்ளார்.

தடுப்பூசி மையத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்ட அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்துகின்றனர்.

செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தைச் செயல்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு தாமதிக்கும் நிலையில் தமிழக அமைச்சரின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.