தமிழகத்தில் ஆறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பொதுப்பணித்துறை செயலாளராக இருந்த எஸ்.கே பிரபாகர், நெடுஞ்சாலைத்துறை செயலாளராக நியமனம். அதே போல் பொதுப்பணித்துறை செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி மணிவாசனை நியமித்து தமிழக அரசு உத்தரவு.

Advertisment

tamilnadu ias officers transfer tn chief secretary shanmugam announced

சமூக நலத்துறை செயலாளராக மதுமதியும், நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக கண்ணனும் நியமனம். மேலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கவிதா ராமு நியமனம். சமூக நலத்துறை ஆணையராக ஐ.ஏ.எஸ் ஆப்ரஹாம் நியமித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு.

Advertisment