Advertisment
தமிழ்நாடு அரசு இன்று (10/01/2022) மூன்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவன செயல் இயக்குநராக அருண்ராஜ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.
பால்வளம், பால் பண்ணை வளர்ச்சித்துறை ஆணையராக ஜி.பிரகாஷ் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார்.அதேபோல், கனிமவளத்துறை மேலாண் இயக்குநராக சுதீப் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்.