tamilnadu housing board opening and order issuing function trichy

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடமேம்பாட்டு வாரியம் சார்பில் இன்றுபுதிய அடுக்குமாடிக் குடியிருப்பு திறப்பு விழா மற்றும் பயனாளிகளுக்குப் பணி ஆணை வழங்கும் விழா நடைபெற்றது.

Advertisment

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று (10.04.2023) திருச்சிராப்பள்ளி மாவட்டம் இருங்களூர் திட்டப் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டடங்களைத்திறந்து வைத்தார்.

Advertisment

இருங்களூரில்நடைபெற்றநிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப் குமார் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஒதுக்கீடு ஆணைகளையும் கிரயப் பத்திரங்களையும் வழங்கினார். இந்நிகழ்வில், லால்குடி வருவாய் கோட்டாட்சியர் திரு. வைத்தியநாதன். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் நிர்வாக பொறியாளர் இளம்பரிதி, உதவி நிர்வாக பொறியாளர் முருகானந்தம், இருங்களூர்ஊராட்சி மன்றத்தலைவர் வின்சென்ட், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள்கலந்து கொண்டனர்.