இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது. கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

Advertisment

தமிழகத்தில் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

TAMILNADU HELATH MINISTER PRESS MEET AT CHENNAI

ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "விமான நிலையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.பள்ளிகள், அங்கன்வாடிகள், தொழிற்சாலைகள், பெரும் நிறுவனங்களில் கரோனா தடுப்பு பற்றி விழிப்புணர்வு. மதுரை புறநகர் பகுதியில் தனி வார்டுகள் அமைக்க முடிவு செய்துள்ளோம். மேலும் நான்கு இடங்களில் கரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்க பரிசீலனை. தாம்பரம் அருகே கரோனா தடுப்பு சிகிச்சை மையம் அமைக்க முடிவு செய்துள்ளோம். கரோனா தடுப்பு விழிப்புணர்வு குறும்படம் அரசு சார்பில் இன்று மாலை வெளியிடப்படும்.

Advertisment

கரோனா குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா குறித்த வீண் வதந்திகளை நம்பி யாரும் பீதியடைய வேண்டாம். கூடுதலாக முகக் கவசங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். ஓமனில் இருந்து திரும்பியவரின் மனைவிக்கு கரோனா பாதிப்பு இல்லை. எல்லோரும் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை. மக்கள் பதற்றம் அடைய தேவையில்லை. பொது மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனா தடுப்பு நடவடிக்கையாக இதுவரை 1,22,318 பேரை பரிசோதித்துள்ளோம்." இவ்வாறு அவர் பேசினார்.