tamilnadu heavy rains regional meteorological cnetre

"தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நவம்பர் 30- ஆம் தேதி, தென் தமிழகம், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. டிசம்பர்- 1- ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு. சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

Advertisment

தென் கிழக்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். அதிகபட்சமாக மேட்டுப்பட்டி (மதுரை)- 9 செ.மீ., அவிநாசி- 8 செ.மீ., வாடிப்பட்டி, சோழவந்தானில் தலா 7 செ.மீ. மழை பதிவானது" இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment