/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rains5.jpg)
"தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவுகிறது. புதிதாக உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்தத் தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெற்ற பின் மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகரும்.டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 2- ஆம் தேதி தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. பலத்த காற்று வீச வாய்ப்புள்ள பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்." இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் எனக் கூறப்பட்ட நிலையில் மேலும் தாமதமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)