தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை. தமிழகத்தில் நாளை மிக கனமழை முதல் மிக அதிக கனமழை பெய்ய இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவையில் நாளை மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதேபோல் சேலம்,திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.