Skip to main content

"பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கரோனா"- சுகாதாரத்துறைச் செயலாளர் பேட்டி... 

Published on 25/12/2020 | Edited on 25/12/2020

 

tamilnadu health secretary radhakrishnan press meet at chennai

சென்னை கிண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர். ஜெ.ராதாகிருஷ்ணன், "பிரிட்டனில் இருந்து இதுவரை தமிழகம் வந்தவர்களில் மொத்தம் 5 பேருக்கு கரோனா உறுதிச் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையைச் சேர்ந்தவருக்கு கரோனா உறுதியான நிலையில் மேலும் 4 பேருக்கு இருப்பது உறுதியாகியுள்ளது. புதிதாக தஞ்சையைச் சேர்ந்த 2 பேருக்கும், மதுரை, சென்னையைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இந்த 5 பேருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது. 

 

5 பேருக்கும் உருமாறிய கரோனாவா என ஆய்வு செய்ய புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளது. வீரியமிக்க கரோனா தொடர்பாக தமிழக மக்கள் பீதி அடையத் தேவையில்லை. வழிகாட்டுதல் நெறிமுறைகளை முறையாக பின்பற்றினால் எந்த கரோனாவுக்கும் அச்சப்பட தேவையில்லை." என்றார். 

 

சார்ந்த செய்திகள்