சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கரோனா பரிசோதனை முடிவுகளை குறுஞ்செய்தி (SMS) மூலம் தெரிவிக்கும் நடைமுறையை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை பயன்பாட்டிற்காக இரண்டு பேட்டரி கார்களையும் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

Advertisment

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "பாடகர் எஸ்.பி.பி., எம்.பி. வசந்தகுமாரின் உடல்நிலை சீராக உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான வசதிகளை வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளோம். கூட்டத்தொடர் நடக்கும்போது தேவைப்பட்டால் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். கரோனா உயிரிழப்புகளைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார்.

Advertisment