tamilnadu health minister vijayabaskar press meet

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நல்லகண்ணுவுக்கு மருத்துவர்கள் கரோனா பரிசோதனைசெய்தனர்.

Advertisment

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "திரைப்பட பாடகர் எஸ்.பி.பி. உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. வசந்தகுமார் எம்.பி.க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவுக்கு கரோனா இல்லை. ஐந்து நாட்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நல்லக்கண்ணு வீடு திரும்புவார்.அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படும்". இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisment