Advertisment

'கரோனா காலத்திலும் புற்றுநோய் சிகிச்சை' -அமைச்சர் விஜயபாஸ்கர்!

tamilnadu health minister vijaya baskar

Advertisment

தமிழக முதலமைச்சர் உத்தரவின் பேரில் கரோனா தொற்று காலத்திலும் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் 2020 மார்ச் முதல் இதுவரை 1,31,352 பேர் புற்றுநோய் சார்ந்த மருத்துவ சேவைக்காக வெளிப்புற நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். 1,31,352 பேரில் 48,647 பேர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கான அறுவை சிகிச்சைகள் 2,191 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 27,721 பேருக்கு கீமோதெரபியும், 11,678 பேருக்கு கதிர்வீச்சு சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது. 6,664 பேருக்கு வலி மற்றும் நிவாரண மையங்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதுஎன அமைச்சர் கூறியுள்ளார்.

coronavirus health minister vijaya baskar
இதையும் படியுங்கள்
Subscribe