/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vijaya baskar4444.jpg)
சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "கரோனாவிலிருந்து குணமடைந்து மறுபிறவி எடுத்துள்ளார் உணவுத்துறை அமைச்சர் காமராஜ். அமைச்சர் முழு அளவில் குணமாகிவிட்டார். இன்று மாலை (அல்லது) நாளை காலை அமைச்சர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். ஒரு மாத தொடர் சிகிச்சைக்குப் பின் அமைச்சர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அமைச்சருக்கு ஆரம்பத்தில் 95% அளவுக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது. 95% அளவுக்கு நுரையீரல் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் மீண்டு வந்தது மருத்துவ வரலாற்றில் ஒரு அதிசயம். அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் உதவியுடன் அமைச்சர் குணமடைந்துள்ளார்" என்றார்.
இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அமைச்சருடன் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Follow Us