tamilnadu health minister vijaya baskar personal assistant incident

Advertisment

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளராக இருந்தவர் வெங்கடேசன். இவரும் இவரது ஓட்டுனரும் சென்ற கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இருவரும் உயிரிழந்தனர். அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பான குட்கா ஊழலில் சிபிஐயின் விசாரணைக்குள்ளானவர் இந்த வெங்கடேசன். இவரது மரணம் குறித்து அவரது உறவினர்கள் சந்தேகத்தை கிளப்புகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் வழக்கு தொடரவும் தயராகி வருகிறார்கள். இந்நிலையில் வெங்கடேசன் மரணம் குறித்து சிபிஐ தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.