Advertisment

"நீட் தேர்வு 100% ரத்து செய்யப்படும்"- அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!

tamilnadu health minister pressmeet at chennai

Advertisment

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,415 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தினமும் 1.30 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் செய்யப்பட்ட அளவிற்கு பரிசோதனைகள் தற்போதும் செய்யப்படுகின்றன. மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த 9 மாவட்ட மருத்துவர்களுடன் காணொளியில் ஆலோசிக்கப்பட்டது.

மகப்பேறு பரிசோதனைக்கு வரும் தாய்மார்களுக்கு யோகா, மூச்சுப்பயிற்சி வகுப்புகள் நடத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்படுவதற்காக பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் நுழைவுத்தேர்வு 100% ரத்துச் செய்யப்படும். மாணவர்கள் பயிற்சிக்கு செல்வதைத் தடுத்து ஒரு வேளை காலதாமதம் ஏற்பட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும். நீட் எதிர்ப்பு தீர்மானம் குடியரசுத்தலைவருக்கு சென்றால் அது ஒப்புதலோடுதான் திரும்ப வேண்டும்.

விரும்பிய தேதியில் குழந்தைப் பிறக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிசேரியன் செய்வது அதிகரித்துள்ளது.அவசியம் இருந்தால் மட்டுமே சிசேரியன் செய்யப்பட வேண்டும். விருப்பத்தின் பேரில் சிசேரியன் செய்வது ஏற்கத்தக்கது அல்ல; இதனால் குழந்தையின் வளர்ச்சிப் பாதிக்கும். சுகப் பிரசவத்தில் குழந்தைப் பெறுவதற்கு ஊக்குவிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

Advertisment

தமிழகத்தில் 36- வது நாளாக ஒருநாள் கரோனா மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Health Minister pressmeet Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe