/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cvijayabaskar (1).jpg)
புதுக்கோட்டையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் செய்தியாளார்களைச் சந்தித்தார். அப்போது கரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 'ரெம்டெசிவர்' மருந்து பலனளிக்கவில்லையா என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "கரோனா தீவிரமாக உள்ளோருக்கு 'ரெம்டெசிவர்' உள்ளிட்ட மருந்துகள் பலனளிக்கவில்லை என்பதில் உடன்படுகிறோம். 'ரெம்டெசிவர்', 'லோபினாவிர்', 'ரிட்டோனாவிர்' மருந்துகள் கரோனா தீவிரமாக உள்ளவர்களுக்கு பலனளிக்கவில்லை. கரோனா ஆரம்பக் கட்டத்தில் இருப்பவர்களுக்கு இத்தகைய மருந்துகள் பலன் அளிக்கிறது.
7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நாடே எதிர்பார்க்கிறது. 7.5% இடஒதுக்கீடு விவகாரத்தில் இன்றும் கால அவகாசம் உள்ளது. ஆளுநரின் முடிவுக்குப் பிறகு மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு தமிழகத்தில் நடைபெறும்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)