Skip to main content

கரோனாவால் இறந்தவரின் உடலை எடுத்துச்செல்லும் வழிமுறை, உடலை அடக்கம் செய்யும் வழிமுறை!- தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு!!

Published on 12/04/2020 | Edited on 12/04/2020

கரோனா நோயாளி உடலை எடுத்துச்செல்லும் வழிமுறை மற்றும் அடக்கம் செய்யும் வழிமுறையை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை. 

 


கரோனாவால் இறந்தவரின் உடலை எடுத்துச்செல்லும் வழிமுறை:

அதில் 'கரோனாவால் இறந்தவர் உடலை பிளாஸ்டிக் பையில் வைத்து முழுமையாக சுற்றி வைக்கவேண்டும். பிளாஸ்டிக் பையின் மேல்புறங்களில் 1% சோடியம் ஹைப்போ குளோரைட் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இறந்தவர் உடலை கையாளுபவர்கள் சர்ஜிக்கல் மாஸ்க், கையுறை அணிய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

tamilnadu health department released instruction coronavirus

கரோனாவால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் வழிமுறை:

'கரோனாவால் இறந்தவரின் உடலை தகனம்/ அடக்கம் செய்யும் இடத்தில் மாஸ்க், கையுறை அணிய வேண்டும். இறந்தவர் உடலை உறவினர்கள் பார்க்க விரும்பினால் பணியாளர் முகத்தை மட்டும் திறந்துக் காட்டலாம். பணியாளரைத் தவிர வேறு யாரும் இறந்தவர் உடலை கையாள அனுமதிக்க வேண்டாம். இறந்தவர் உடலைத் தொட தேவையில்லாத மதசம்பந்தமான சடங்குகளை செய்ய அனுமதிக்கலாம். இறந்தவர் உடலை குளிப்பாட்டுதல், கட்டியணைத்தல் முத்தமிடுதல் போன்றவற்றை செய்ய அனுமதி இல்லை. தகனம்/ அடக்கம் செய்யும் இடத்தில் உள்ள பணியாளர்கள், குடும்பத்தினர் சுகாதார முறையை பின்பற்றுவது கட்டாயம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுறுத்தல்!

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Lok Sabha elections Election Commission of India Important Instruction

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் மக்களவை தேர்தலின் போது குழந்தைகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தேர்தல் தொடர்பான எந்த ஒரு பணிகளிலும், குழந்தைகளை பணி செய்ய அனுமதிக்கக் கூடாது. மக்களவை தேர்தலில் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் குழந்தைகளை வைத்து பிரச்சாரம் மேற்கொள்வவோ, சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகம் செய்தல், முழக்கம் எழுப்பவோ, பேரணிகளில் ஈடுபடுத்துவதையோ தவிர்க்க வேண்டும். அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் குழுந்தைகளை கையில் தூக்கி செல்வது, பிரச்சாரம் மற்றும் பேரணி வாகனங்களில் குழந்தைகளை ஏற்றுவதற்கு தடை விதிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

4 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் முக்கிய அறிவுறுத்தல்

Published on 17/12/2023 | Edited on 17/12/2023
Chief Minister's Important Instruction to 4 District Collectors

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களின் பல இடங்களில் கனமழை பொழிந்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் முக்கிய அறிவுறுத்தல்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார். அதில், “கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக சு. நாகராஜன், திருநெல்வேலி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக இரா. செல்வராஜ், தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக பா.ஜோதி நிர்மலா, தென்காசி மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக சுன்சோங்கம் ஜதக் சிரு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் இன்று (17-12-2023) திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்வேறு துறை உயர் அலுவலர்களுடன் காணொளி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு, அதிகனமழையினை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளை விரைந்து செயல்படுத்த ஊரக வளர்ச்சி இயக்குநர் பொன்னையா, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா, நகராட்சிகளின் இயக்குநர் சு.சிவராசு, கூடுதல் வருவாய் நிர்வாக ஆணையர் கோ. பிரகாஷ் ஆகியோர் இம்மாவட்டங்களில் இருந்து பணிபுரிய அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகனமழை காரணமாகப் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் பாபநாசம் அணைகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படுவதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு பொதுவான எச்சரிக்கை நடைமுறை மூலம் 2.18 இலட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மீட்புப் பணிகளுக்காகத் தேவைப்படும் இடங்களில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் மூலம் படகுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் தவிர்க்க இயலாத நிலையில் அத்தியாவசியமாகத் தேவைப்படும் பணியாளர்களை மட்டும் கொண்டு செயல்படவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைப்பதோடு, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய பகுதிகளில் இருந்து முன்கூட்டியே பொதுமக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க வேண்டும். நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட நபர்களுக்குத் தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், குழந்தைகளுக்குத் தேவையான பால் மற்றும் மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் பல்துறை மண்டலக் குழுக்களையும், போதுமான படகுகளையும் நிலைநிறுத்த வேண்டும். ரொட்டி, பிஸ்கெட், தண்ணீர் பாட்டில்கள், பால் பவுடர் ஆகியவற்றை போதுமான அளவு இருப்பு வைத்திருக்க வேண்டும். மழை அளவு, அணைகளின் நீர்வரத்து ஆகியவற்றை தொடர்ந்து கண்காணித்து அணைகளில் நீர் மேலாண்மை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.