இந்தியாவில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது. கரோனாவிற்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
இந்நிலையில் தமிழகத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74ல் இருந்து 124 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இன்று கரோனா தொற்று கண்டறியப்பட்ட 57பேரில் 45 பேர் டெல்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று கூறிய அவர், டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1,131 பேர் தமிழகம் வந்துள்ளதாகவு்ம், இதில் 515 பேர் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
இதுவரை தமிழகத்தில் ஒருவர் கரோனோவால் உயிரிழந்துள்ள நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.