Advertisment

தமிழகத்தில் படிப்படியாகத்தான் ஊரடங்கு தளர்வு- மருத்துவ நிபுணர் குழு முதல்வருக்கு பரிந்துரை!!

 In Tamilnadu gradual relaxation of the curfew - medical expert panel recommendation

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதேபோல் தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நடைமுறையில் உள்ளது.

Advertisment

இந்நிலையில் சென்னையில் காணொலி மூலம், 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். மருத்துவ குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவுகள் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகியிருந்த நிலையில், இந்த ஆலோசனைக்கு பிறகுமருத்துவ நிபுணர் குழு சார்பில்மருத்துவ நிபுணர் பிரதீப்கவுர்தெரிவித்ததாவது,

Advertisment

தமிழகத்தில் ஊரடங்கு படிப்படியாகத்தான் தளர்த்த முடியும்.தமிழகத்தில் ஊரடங்கைமுழுமையாக தளர்த்த தற்போது வாய்ப்பு இல்லை. கரோனா நீண்ட நாட்கள்நம்முடன் இருக்கும். எனவே இந்த வைரஸில் இருந்து விடுபட நம் வாழ்க்கை முறையையே மாற்ற வேண்டும். வயது குறைந்தவர்கள் மற்றும் முதியவர்களிடம் நெருங்கி இருப்பதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். அதேபோல் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய் பாதிப்பு உள்ளவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.சில இடங்களில் ஊரடங்கைபடிப்படியாக தளர்த்த பல ஆலோசனைகளை வழங்கி உள்ளோம். கடந்த வாரத்தில் கரோனாபரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. இவ்வாறுஎங்களதுஆலோசனைகளை, முதல்வருடன் கூடிய ஆலோசனை கூட்டத்தில்தெரிவித்துள்ளோம். ஆனால் ஊரடங்கு தளர்த்துவதுபற்றி தமிழக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

Medical Student lockdown Tamilnadu corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe