ADVERTISEMENT

தடையை மீறிய தமிழக அரசு! இரவு நேரத்திலும் ரேசன் கடைகளில் ரூ.1000 விநியோகம்!

11:01 PM Jan 09, 2019 | cnramki

வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு பொங்கல் பரிசுடன் ரூ.1000 வழங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கும் நிலையில், இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சிவகாசி வந்திருந்த கடம்பூர் ராஜு பேட்டி அளித்தபோது -

ADVERTISEMENT

ADVERTISEMENT

“நீதிமன்ற நடைமுறை வந்துவிட்டால், உடனடியாக அரசாங்கம் முடிவு செய்துவிட முடியாது. பொங்கல் பரிசு வழங்குவதென்பது புதிதல்ல. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பொங்கல் பரிசோடு ரூ.100 வழங்கினார். அம்மா வழியில் அதனை விரிவாக்கம் செய்து ரூ.1000 கொடுப்பதாக அறிவித்து, மகிழ்ச்சியோடு மக்கள் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலைமையில், இப்போது தடை விதித்திருந்தாலும் கூட, மேல்முறையீடு செய்து, மக்களுக்கு நிச்சயமாக அரசு வழங்கும்.” என்றார்.

அறிவித்தபடி கொடுத்தாக வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதை அறிந்தோ என்னவோ, விருதுநகர் மாவட்டத்தில் தடையை மீறியிருக்கின்றனர். மம்சாபுரம் ரேஷன் கடையில் இரவு 12 மணி வரையிலும் போலீஸ் பாதுகாப்புடன் பொங்கல் பரிசு கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து, கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இரவு 10 மணி கடந்தும், ஸ்ரீவில்லிபுத்தூர், மாயாண்டிபட்டி ரேஷன் கடை எண் 1-இல் ரூ.1000 உள்ளிட்ட பொங்கல் பரிசினை பொது மக்களோடு சேர்ந்து காவல் துறையினரும் பெற்றுச் சென்ற வண்ணம் உள்ளனர். இதே ரீதியில், ஸ்ரீவில்லிபுத்தூரில் பல ரேஷன் கடைகளும் கண்விழித்துக் கடமையாற்றுவதால், மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நக்கீரன் வாசகர் ஒருவர், ரேசன் கடை தள்ளுமுள்ளு காட்சிகளைத் தனது செல்போனில் படம் பிடித்து நமது இணையதளத்துக்கு அனுப்பியிருக்கிறார்.

உயர் நீதிமன்றத் தடையைத் தமிழக அரசும் விருதுநகர் மாவட்ட நிர்வாகமும் கண்டுகொள்ளாதது கண்கூடாகவே தெரிகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT