Skip to main content

அரசுப்பள்ளி மாணவர்கள் 4560 பேர் வெளிமாநிங்களுக்கு களப்பயணம்!

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

அரசுப்பள்ளிகளில் பயிலும் 4560 மாணவ, மாணவிகளை வெளிமாநிலங்களுக்கு களப்பயணம் அழைத்துச்செல்ல பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு கல்வி ஆண்டின்போதும் மாணவ, மாணவிகளுக்கு வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள், கல்வி சார்ந்த மையங்களுக்கு நேரடியாக அழைத்துச்சென்று பயிற்சி வழங்கப்படுகிறது. அதேபோல் கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக பள்ளிக்கல்வித்துறையும், அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வெளிமாநிலங்களுக்கு களப்பயணம் அழைத்துச் சென்று வருகிறது. 


அதன்படி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மூலம் நடப்பு 2019&2010 கல்வி ஆண்டில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நேரடி களப்பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதற்கென ஒரு கல்வி மாவட்டத்திற்கு 30 மாணவர்கள் வீதம் 120 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 3600 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் மாணவர் ஒருவருக்கு 2 ஆயிரம் ரூபாய் வீதம் 72 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. வெளிமாநில நிறுவனங்களை பார்வையிடும் நிகழ்வை, மத்திய அரசு நிறுவனமான ஐஆர்சிடிசி உடன் இணைந்து, நடப்பு மாதம் முதல் பிப்ரவரி வரை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

tamilnadu govt schools students 4560 education related trip in andhra pradesh and karnataka


இதேபோல் தொடக்கக்கல்வியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், மாவட்டத்திற்கு 30 பேர் வீதம் 32 மாவட்டத்தில் இருந்தும் மொத்தம் 960 பேரும் இந்த பயணத்தில் பங்கேற்கின்றனர். அதன்படி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கர்நாடகா மாநிலம் மைசூருவுக்கும், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கும் களப்பயணம் செல்கின்றனர். கோவை, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கும், அரியலூர், கடலூர் உள்பட இதர 10 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆந்திராவில் உள்ள திருப்பதிக்கும் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். 


இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்ககம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியுள்ளதாவது: உடல்நலம் குன்றிய மாணவ, மாணவிகளை வெளிமாநிலங்களுக்கு களப்பயணம் அழைத்துச் செல்லக்கூடாது. தெரிவு செய்யப்படும் மாணவர்கள், அவர்களின் பெற்றோரிடம் இருந்து கண்டிப்பாக ஒப்புதல் கடிதம் பெற்று வர வேண்டும். 

tamilnadu govt schools students 4560 education related trip in andhra pradesh and karnataka


எந்தெந்த இடங்களுக்கு களப்பயணம் செல்கின்றனர் என்ற விவரங்களை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். களப்பயணம் முடிந்த பிறகு, மாணவர்களிடம் இருந்து அதன் அனுபவப்பகிர்வு வீடியோக்கள், புகைப்படங்களை பதிவு செய்ய வேண்டும். இருபது மாணவர்களுக்கு ஒரு கணித அல்லது அறிவியல் ஆசிரியர் வீதம் உடன் செல்ல வேண்டும். மாணவிகளும் பயணக்குழுவில் உள்ளதால் கண்டிப்பாக பெண் ஆசிரியர்களும் உடன் செல்ல வேண்டும். 


இரவு நேரத்தில் தங்கும்போது அனைத்து மாணவ, மாணவிகளின் பாதுகாப்பையும் உடன் செல்லும் ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும். களப்பயணத்தின்போது மாணவர்கள் தனியாக எங்கும் செல்லவோ, தேவையின்றி வாகனத்தில் இருந்து இறங்கவோ அனுமதிக்கக் கூடாது. அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக பள்ளி சீருடையில்தான் இருக்க வேண்டும். அடையாள அட்டை, மூன்று நாள்களுக்குத் தேவையான சீருடைகள், அத்தியாவசிய பொருள்கள் மற்றும் தேவையான மருந்து பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டும். விலை உயர்ந்த பொருள்கள், ஆபரணங்களை கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.