தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதி உதவிப் பெறும் பள்ளிகள் என மொத்தம் 5,317 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 31.05.2019. கணக்கின்படி 2,144 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வயது முதிர்வு ஓய்வு மற்றும் பதவி உயர்வின் மூலம் ஏற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதோடு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பாதிக்குமோ என்ற அச்சத்தில் உள்ளார்கள்.

Advertisment

tamilnadu govt schools staff demand students affect

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தரமான கல்வி தந்திட மிகச்சிறப்பான பாடத்திட்டம் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது என்று பாராட்டிக்கொள்ளும் இந்த அரசு, அதே வேளையில் அப்பாடத்திட்டத்தினை மாணவர்களுக்கு போதித்திட ஆசிரியர்கள் இல்லாதது, அரசின் மெத்தனைப் போக்கை எடுத்துணர்த்துகிறது. இதன் தொடர்பாக பேசிய தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத்தலைவர் கே.பி. இளமாறம் கூறுகையில் புதிய பாடத்தினை முறையாக எடுத்து சென்றிட ஆசிரியர்கள் அவசியம். பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகியும் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

tamilnadu govt schools staff demand students affect

இந்நிலையில் செப்டம்பர் 15 ந் தேதி காலாண்டு தேர்வு தொடங்கவுள்ளது. அதே சமயம் 2144 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களுக்கான தேர்வு செப்படம்பர் 27 ல் தொடங்கி 29 ந்தேதி முடியும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகள் வெளிவந்து ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதற்குள் பொதுத்தேர்வு வந்துவிடும். இதனால் மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் ஆசிரியர்கள் எப்போது நியமிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. கணினி ஆசிரியர்கள் தேர்வு முடிவும் வெளியிட வேண்டும்.

மேலும், அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகளில் மூன்று, நான்காண்டுகளாக காலியான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பாததால் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்கள். எனவே மாண்புமிகு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மாணவர்களின் நலன்கருதி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Advertisment