/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/li2 (1).jpg)
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அரசு பொது நூலகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் மூடப்பட்ட நூலகங்கள் மீண்டும் திறப்பதால் கர்ப்பிணிகள், 15 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நூலகத்தில் அனுமதி இல்லை. காலை 08.00 மணிமுதல் மதியம் 02.00 மணிவரை மட்டுமே நூலகங்கள் செயல்பட வேண்டும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசு பொது நூலகத்துறைத் தெரிவித்துள்ளது.
4,638 நூலகங்களில் 749 பகுதி நேர நூலகங்களைத் தவிர மற்ற நூலகங்கள் ஐந்து மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)