Advertisment

பக்தர்களின் 25 ஆண்டுக்கால கோரிக்கை; நிறைவேற்றிக் கொடுத்த தமிழக அரசு

TamilNadu govt has set up a rope car following the 25-year demand of devotees

108 திவ்ய தேச திருத்தலங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்குச் செல்ல மலையடிவாரத்திலிருந்து சுமார் 1306 படிக்கட்டுகள் மலைப் படியேறி சென்றால் மட்டுமே பக்தர்கள் லட்சுமி நரசிம்மரை தரிசிக்க முடியும். அதன்படியே பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர்.

Advertisment

ஆனால் வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெரும்பான்மையான பக்தர்கள் 1306 படிக்கட்டுகள் ஏற மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். பக்தர்களின் அவதியைப் போக்க அனைவரும் மலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அடிவாரத்தில் இருந்து கோவிலுக்குச் செல்ல ரோப்கார் அமைத்துத் தர வேண்டும் எனக் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

Advertisment

கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் இதற்கான பணிகள் தொடங்கின. ஆனால் சில தடங்கல்கள் ஏற்பட்டு பணிகள் தாமதம் ஆகியது. அதன்பின் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக அரசும் இந்த கோவில் ரோப்கார் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம் இந்த திட்டத்தை நிறைவேற்றினால் ஏதாவது விபத்து ஏற்படும் உயிர்பலி ஏற்படும் என்கிற வதந்தியால் அவர்கள் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை.

இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மீண்டும் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்த பின் அமைச்சர் காந்தியின் முயற்சியால் அரக்கோணம் எம்.பி. ஜெகத்ரட்சகன் உட்பட சிலரின் நிதியுதவி மற்றும் தமிழக அரசு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ரோப்கார் அமைக்கும் பணிக்கு ரூபாய் 9.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணி நடைபெற்று வந்தது . மேலும் ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தங்குவதற்கு அடிப்படை வசதிக்காக கட்டுமான பணிகளும் நடைபெற்ற வந்த நிலையில் இரண்டு பணிகளும் தற்போது முடிவடைந்தது.

TamilNadu govt has set up a rope car following the 25-year demand of devotees

மலை அடிவாரத்தில் இருந்து ரோப் கார் வாயிலாக மலைக் கோயிலுக்குச் செல்ல 3 முறை ரோப்கார் சோதனை ஓட்டத்திற்கு பின்பு இன்று பக்தர்கள் பயன்பாட்டிற்காக சென்னையில் இருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாகத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கொடியசைத்து துவக்கி வைத்ததோடு ரோப்காரில் பக்தர்களோடு இணைந்து பயணித்து லட்சுமி நரசிம்மர் சாமி தரிசனம் செய்தனர்.

ரோப்கார் சேவை துவங்கப்பட்டதை தொடர்ந்து சோளிங்கர் பகுதியில் உள்ள பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 25 வருடமாக வாக்குறுதி தந்து செயல்படுத்தாமல் திமுக அரசு, அமைச்சர்கள், அதிகாரிகள் சாதித்துவிட்டார்கள் என்று மக்கள் நெகிழ்ச்சியடைகின்றனர்.

tngovt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe