தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிரத்யேக 'கல்வி' தொலைக்காட்சி வரும் ஆகஸ்ட் 26- ஆம் தேதி முதல் தனது முழு நேர ஒளிபரப்பை தொடங்கும் என்று அறிவிப்பட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தமிழக அரசின் 'கல்வி தொலைக்காட்சி' சோதனை அடிப்படையில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
'கல்வி தொலைக்காட்சியின்' மூலம் தமிழக பள்ளி மாணவர்களுக்கு போட்டித்தேர்வுகள் மற்றும் பொதுத்தேர்வுக்கான வழிமுறைகள் உள்ளிட்டவை எளிமையான முறையில் தொலைக்காட்சியின் மூலம் மாணவர்கள் வீட்டிலிருந்தவாறே கல்வி கற்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.