ADVERTISEMENT

தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்குப் பாடநூல் வழங்க உத்தரவு!

07:11 PM Jul 30, 2020 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. அதேபோல் தமிழக அரசு அறிவித்திருந்த பொதுமுடக்கம் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. நேற்று மத்திய அரசு வெளியிட்ட மூன்றாம் கட்ட தளர்வுகளில் கூட பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள் அனைத்தும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை திறக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று தமிழக பள்ளிக் கல்வித்துறை இணையவழி வகுப்புகளுக்கான கால நெறிமுறைகள், கட்டுப்பாடுகள், விதிமுறைகள் பற்றி விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் தமிழக அரசு சார்பில் மற்றொரு அறிவிப்பும் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் பாடநூல் மற்றும் கல்வி சார்ந்த பொருட்களை, வழிமுறைகளைப் பின்பற்றி வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2, 3, 4, 5, 7 வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள், புத்தகப்பை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவர்களுக்கும் வழங்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்கள் எனக் கால அட்டவணையில் பாடநூல், புத்தகப்பை வழங்க வேண்டும். மாணவர்கள் அதிகம் உள்ள பள்ளியில் இரண்டு அல்லது மூன்று கவுண்டர்களில் பாடநூல்கள், புத்தகப் பைகளை வழங்க வேண்டும். சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளைப் பின்பற்றி மாணவர்களுக்குப் பாட நூல்களை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT