சர்க்கரை ரேஷன்அட்டையை அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற மேலும் மூன்று நாட்கள் அவகாசம் நீட்டிக்கப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

tamilnadu govt announce

பொதுவிநியோக திட்டத்தில் 10 லட்சத்து 19,491 சர்க்கரை ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். சர்க்கரை அட்டையை அரிசி ரேஷன் அட்டையாக மாற்ற விரும்புவோர் விண்ணப்பிப்பதற்காகஏற்கனவே3 வார கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் இன்னும் மூன்று நாட்களுக்கு (நவ.29 ஆம் தேதி வரை) அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.www.tnpds.govt.in என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாச நீடிப்புக்கு பின்னும் காலம் தாழ்த்தி விண்ணப்பிக்கப்பட்டால் ஏற்றுக்கொள்ளமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.