Advertisment

உச்சபட்ச நேர்மையும், அர்ப்பணிப்பும் மிக்கதே ஆம்புலன்ஸ் சேவை!- ஓட்டுநர் பணிநீக்க வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து!

விபத்துள்ளானவரின் பணத்தை அபகரித்த ஆம்புலன்ஸ் டிரைவரை பணி நீக்கம் செய்தது சரியே என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

கரூர் மாவட்டத்தில் 2014- ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்த வரை 108 ஆம்புலன்சில் பணியாற்றிய சரவணன், குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்.

Advertisment

விபத்துக்குள்ளானவருக்கு சொந்தமான பணத்தை முழுமையாகக் கொடுக்காததால், ஓட்டுனர் சரவணனை பணி நீக்கம் செய்து 108 ஆம்புலன்ஸ் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உறுதி செய்ய மறுத்து தொழிலாளர் நல உதவி ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

tamilnadu govt 108 ambulance chennai high court suggestion

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம்.சுப்பிரமணியம், உயிர்க்காக்கும் சேவையான ஆம்புலன்ஸ் சேவையில் பணியாற்றுபவர்கள், உச்சபட்ச நேர்மையும், அர்ப்பணிப்பும் கொண்டிருக்க வேண்டும் எனவும், தவறான நடத்தை ஆம்புலன்ஸ் நிறுவனத்திற்குத்தான் பாதிப்பை ஏற்படுத்தும் என கருத்து தெரிவித்து, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சரவணனை பணி நீக்கம் செய்தது செல்லும் என உத்தரவிட்டார்.

Chennai govt ambulance highcourt
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe