டெல்லியில் உள்ள இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை (10/07/2021) மாலை 04.00 மணிக்கு சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தின் அரசியல் சூழல், கரோனா நிலவரம்,ஏழு பேர் விடுதலை, நீட் தேர்வு உள்ளிட்டவைப் பற்றி பிரதமருடன் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக ஆளுநர் நாளை மறுநாள் (11/07/2021) சந்தித்துப் பேசவிருப்பதாக தகவல் கூறுகின்றன.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்றப் பின் முதன்முறையாக பிரதமரை தமிழக ஆளுநர் சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.