Advertisment

"எனது திருமணம் குழந்தை திருமணமாகும்" - ஆளுநர்  ஆர்.என். ரவி

tamilnadu governor rn ravi talks about his child marriage

Advertisment

மாணவர்கள் மத்தியில் உரையாடுகையில் தமிழக ஆளுநர்தனது திருமணம் குழந்தை திருமணம் என்று கூறியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், குடிமைப் பணிக்குத்தேர்வாகி வரும் போட்டித் தேர்வர்கள் மற்றும் குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சியில் உள்ள இளம் அதிகாரிகளை ஆளுநர் மாளிகையில் சந்தித்து அவ்வப்போது உரையாடி வருகிறார். மேலும் அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். அந்த வகையில்இன்று ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பீகாரில் இருந்து தமிழகம் வந்த மாணவர்கள், சென்னையில்உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர்ஆர்.ஏன்.ரவியை சந்தித்தது உரையாடியுள்ளனர்.

அப்போது மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், "நான் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டேன். எனது திருமணம் ஒரு குழந்தை திருமணமாகும். எனது மனைவி கல்லூரிக்கு சென்று படிக்கவில்லை. இருப்பினும் வாழ்க்கையில் எனக்கு பக்க பலமாக இருந்தார். நான் உலகத்தையே எதிர்க்கும் திறனை எனது மனைவி எனக்கு அளித்தார். நான் எப்போது வீடு திரும்பினாலும் எனக்கு பக்க பலமாக இருந்தார். அதுபோல குடும்பத்தினர் நம் பக்கம் இருந்தால் நம்மால் நிச்சயம் சாதிக்க முடியும்"எனப் பேசினார்.

Chennai students governor
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe