tamilnadu governor goes to delhi meet president and prime minister

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திடீர் பயணமாக விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார்.

Advertisment

வரும் வெள்ளிக்கிழமை வரை டெல்லியில் தங்கியிருந்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை ஆளுநர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்பட ஏழு பேர் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் இரண்டு ஆண்டுகளாக முடிவெடுக்காமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில், ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.