Advertisment

ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் நன்றி!

tamilnadu governor approves the bill students and political parties leaders

Advertisment

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் என அனைத்துத் தரப்பினரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

தி.மு.கதலைவர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், '45 நாட்கள் கழித்து, கலந்தாய்வுக்கான காலம் நெருங்குகையில் மசோதாவுக்கு ஒப்புதல் தந்த ஆளுநருக்கு நன்றி. தி.மு.க.வின் போராட்டமும் நீதியரசர்கள் வைத்த மனசாட்சி வேண்டுகோள்களும் ஆளுநரின் மனமாற்றத்துக்கு காரணம். இறுதியில் வென்ற சமூகநீதி எப்போதும் வெல்லும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

governor banwarilal purohit Tamilnadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe