ADVERTISEMENT

“இங்கிலாந்தில் தமிழ்நாடு அரசு சார்பில் பென்னிக்குயிக் சிலை” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 

12:30 PM Jan 15, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் சிலை அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டில் நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென் தமிழகத்தின் உயிர்நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையில் தனது சொந்த பணத்தை செலவு செய்து அமைத்த, கர்னல் ஜான் பென்னிகுயிக்-ன் புதிய சிலையை, அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் நிறுவப்படுவது குறித்து அவருடைய பிறந்த நாளான ஜனவரி 15 இன்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

கர்னல் ஜான் பென்னிகுயிக்-ன் புதிய சிலையை அவரின் சொந்த ஊரான இலண்டன்-கேம்பர்ளி நகர மையப் பூங்காவில் நிறுவ அனைத்து இலண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் எடுக்கப்பட்டு. சிலை நிறுவ இங்கிலாந்து சட்டப்படி, செயிண்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலைப் பெற்றுள்ளார்கள். தமிழக மக்களுக்காக கடின தியாகமான உழைப்பினாலும், தொழில்நுட்ப நிபுணத்துவத்தினாலும் பெரியாற்றின் குறுக்கே பெரியாறு அணையை 1895ஆம் ஆண்டு கட்டி முடித்து, தமிழகத்திற்கு குறிப்பாக தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய வழிவகை செய்தார். அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரமே முற்றிலும் செழுமையடைந்து மாற்றங்கள் பெற்றுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT