/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tasmac 56.jpg)
"டாஸ்மாக் வழக்கு இன்று (15/05/2020) உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் விசாரணைக்கு வருகிறது. வழக்கை எதிர்கொள்ள நானும் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜாவும் தயார் நிலையில் உள்ளோம்.." என்கிறார், வழக்கறிஞர் K.பாலு.மேலும் அவர், “சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்டசிறப்பு அமர்வு முன்பாக காலை 10.30 மணிக்கு வழக்கு விசாரணை தொடங்கும்.
மனுதாரர்கள் தரப்பு வாதத்தை நேற்றே நாங்கள் நிறைவு செய்ததால், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய நாராயண் தனது வாதத்தை இன்று முன்வைப்பார். உச்சநீதிமன்றத்தில் நமது வழக்கு இன்று 36- ஆவது வழக்காகப் பட்டியலிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு சுமார் 12.00 மணி அளவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/supreme court 896_0.jpg)
சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு வழக்கின் இறுதி விசாரணையை நடத்திக் கொண்டிருப்பதால், உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையை வேறு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று முறையிட உள்ளோம். இரண்டு வழக்குகளும் வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடைபெற உள்ளதால், சென்னையிலிருந்தே இரண்டு வழக்குகளையும் நடத்த முடியும். உயர்நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞரின் வாதத்தைக் கவனித்துக் கொண்டே, உச்சநீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வருகின்ற பொழுது, அந்த வழக்கிலும் ஆஜராவதில் எங்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கப் போவதில்லை. ஒருவேளை உச்சநீதிமன்றமும் வழக்கு விசாரணையை இன்றே நடத்தினால், சற்று சிரமமாகத்தான் இருக்கும்.” என்கிறார்.
Follow Us