Advertisment

டாஸ்மாக் வருவாய்க்குப் பதிலாகப் பிற துறைகளில் 5 ஆண்டுகளில் ஈட்டலாம்!- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

tamilnadu government tasmac shops chennai high court

Advertisment

டாஸ்மாக் மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயை, பிற துறைகளிலிருந்து பெறுவதற்கு 5 ஆண்டுகள் வரை ஆகும் என, சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தனது வாதங்களைத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளைத் திறக்கத் தடை கோரிய வழக்குகளில் தமிழக அரசு தனியாகப் பதில் மனு தாக்கல் செய்ய முழு அமர்வு உத்ததவிட்டிருந்தது. இன்று, இரண்டாவது நாளாக வழக்கு விசாரணை துவங்கியபோது, அரசுத் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்படவில்லை.

அப்போது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, விரிவான பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டுமெனவும், அதே சமயம் மனுதாரர்கள் மற்றும் இடையீட்டு மனுதாரர்கள் நேற்று வைத்த வாதங்களுக்கு பதில் வாதங்களை முன்வைக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisment

இதனை ஏற்ற நீதிபதிகள், அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட அனுமதித்ததுடன், வாதங்கள் இன்று நிறைவடையாத பட்சத்தில் திங்கள் கிழமையும் விசாரணை நடைபெறும் என்று அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் தொடங்கிய பதிலுரையில், தமிழகத்தின் வளர்ச்சிக்கு டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும், டாஸ்மாக் மதுபான விற்பனைக்குப் பதிலாக வேறு துறைகள் மூலம் இந்த வருவாயை ஈட்டுவதற்கு, 4 அல்லது 5 ஆண்டுகளாகும் எனவும் வாதங்களை முன்வைத்துள்ளார்.

chennai high court tasmac shop
இதையும் படியுங்கள்
Subscribe