Advertisment

நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்!

நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரிய தமிழக அரசின் மசோதாக்களை நிராகரித்ததற்கு தமிழக அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும். அதே போல் தமிழக அரசு அனுப்பிய இரு மசோதாக்களையும், மத்திய அரசு நிராகரித்தது அதிர்ச்சி அளிப்பதாக தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறினார்.

Advertisment

tamilnadu government send neet exam relaxation bill reject the union governement

கிராமப்புற மாணவர் நலனை துச்சமென நினைக்கும் மத்திய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது. மேலும் நீட் மசோதாக்களுக்கு ஒப்புதலை பெற முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீட் தேர்வு மசோதாக்களை மத்திய அரசு மீண்டும் மறுபரிசீலனை செய்து மனிதஉணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என மு.க ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

neet exam bill Rejection Stalin DMK tamilnadu take action union government
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe